Wednesday, March 16, 2011

Tamil Kavithai


காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை.....
ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை....
என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்­ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை....
மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை.....

ஓர வஞ்சனை

ஊனமுற்றவர் என்றால் நீ ஓடிவந்து உதவுவாயே
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் தொலைத்து நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே......
உதவு  மானே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி.....

காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை.....
ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை....
என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்­ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை....
மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை.....

முதல் கவிதை

இந்த வெள்ளை மலர்களை கொண்டு
நான் உன் மீது வைத்திருக்கும்
கொள்ளை பிரியத்திற்கு எல்லை இல்லை
என்பதை சொல்லி சந்தோஷத்தில்
துள்ளி குதிக்கும் என் மனதையும்
சேர்த்து கொடுக்கிறேன் உனக்கு...
அள்ளி முடிந்துகொள்
இந்த மலர்களோடு சேர்த்து என்னையும்
பூவுக்குள் மனமாய் என்றும் இருப்போம்
இந்த பாருக்குள் பிரியாமல் ஒன்றாய்

கனவு வங்கி

சமுதாயக் கூடத்தில்
காட்சிப் பொருளாகி விட்டாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட ஒரு மாது.

அவள்
கனவுக் கடலுக்கு,
குத்தகை தந்துவிட்டு
அனுதினமும் வலை வீசினாள்.

ஆனால்,
அவள் வலையில்
ஒரு மீனும் சிக்கவில்லை.
குமுறி நெஞ்சம் அழுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

கனவுப் பஞ்சம் ஆனதினால்,
கடனாகக் கிடைக்கும் என்ற
கற்பனை ஓட்டத்துடன்
கனவு வங்கியைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

கானல் நீராகி விடுமோ
கனவில்லா தன் வாழ்வென்று,
கணவன் ஒருவனைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

உனது தொந்தரவும் சுகம் தான் எனக்கு...!!
விரல்கள் புல்லாங்குழலை
தொந்தரவு செய்ததால்தான்
இனிய ஓசை..
அன்பே!
உனது தொந்தரவும்
சுகம் தான் எனக்கு...!!

தொலைந்த காதல்

தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்தும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன் காதல்.........

என்னவள் அழைத்திருந்தாள்...

நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!
என்னவள்தான் அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்'
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!
'ஒரு கவிதை சொல்லேன்'
ஓர் செல்ல சிணுங்கல்
'நீ' என்கிறேன்!!!
'ச்சீ' மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!
முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!
கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!

மலரும் மனமும்

அன்பே
காலையில் நீ சூடியிருந்த
மணம் வீசும் மல்லிகை பூக்கள்
மாலையில் நீ அவற்றை
வீசியபின் வாடிவிட்டது -
உன்னை பிரிந்த வருத்தத்தில்தான்
யாருக்குத்தான் வருத்தம் வராது
உன்னோடு இருந்துவிட்டு பிரியும்போது
அந்த மலருக்கு மட்டுமல்ல
என் மனதுக்கும் அதே நிலைதான்
அன்பே...

காதல்

உன்னை பிடித்தது!
உன்னை பிடித்ததால் எனக்கு
என்னை பிடித்தது!
உனக்கும் என்னை பிடித்ததால்,
எனக்கு என்னை இன்னும் பிடித்தது!!

வேண்டும்...

உன் கூந்தலில்
நான் சிக்காய்
இருக்க வேண்டும்!
உன் கண்ணில்
நான் இமையாய்
இருக்க வேண்டும்!
உன் நெற்றியில்
நான் பொட்டாய்
இருக்க வேண்டும்!
உன் விரலில்
நான் நகமாய்
இருக்க வேண்டும்!
உன் கையில்
நான் ரேகையாய்
இருக்க வேண்டும்!
உன் காலில்
நான் கொலுசாய்
இருக்க வேண்டும்!
உன் உடலில்
நான் நிழலாய்
இருக்க வேண்டும்!
உன் உயிரில்
நான் ஜீவனாய்
இருக்க வேண்டும்!
பெண்ணே...
நான் இப்படி எல்லாம்
இருக்க உன் வரம்
வேண்டும்...

விடுபட்ட இருமுகம்

அவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன
தேடி பார்க்கிறேன்
பார்வை வீசி
பாதம் வரையிலும்
மழை நின்று
மிதமாய்
குளிர் வாடை காற்று
உற்சாகத்தில் என்னவள்
என்னவென்று தவிக்கிறேன்
இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
பிரகாசமாய்
தோள் சாய்ந்து
சந்தோசத்தில் அவள்
அழகாய்...
அழகழகாய்...
இரு முகம் தண்­ணீரில்!




No comments:

Post a Comment