Friday, December 17, 2010

Cinema News

செதுக்கப்படும் 7ஆம் அறிவு

மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தவிர மற்ற படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் 60 முதல் 90 நாட்களில் முடித்து விடுவார்கள். சூர்யாவின் ஏழாம் அறிவு 200 நாட்கள் சூட்டிங்கை கடந்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் பட்டியலில் இடம்பெற்று விடும் போலிருக்கிறது.
தமிழ்சினிமாவில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதைக்களனில் தயாராகி வருவதாக கூறப்படும் “ஏழாம் அறிவு” மொத்த வேலைகளும் முடிய குறைந்தது இன்னும் ஆறு மாதமாவது ஆகும் என்பதால் படம் அடுத்தாண்டு மே, ஜூனில்தான் வெளிவரும் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். நாட்கள் ஏற ஏற பட்ஜெட்டும் ஜெட்டாக ஏறினாலும், நல்ல தரமாக எடுப்பதற்கு பட்ஜெட் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று இயக்குனர் முருகதாஸுக்கு தயாரிப்பாளர் உதயநிதி வாக்குறுதி அளித்திருப்பதால், முருகதாஸும் மெருகேற்றி வருகிறார். சூர்யாவின் அடுத்த படத்துக்கு அவரது ரசிகர்கள் இன்னும் ஆறுமாதம் காத்திருக்க வேண்டுமென்றாலும், நல்ல திரைப்படத்திற்காக காத்திருப்பதில் தவறில்லைதானே !


காவலன் ட்ரைலர்-அமெரிக்காவில் அரங்கேற்றிய விஜய்!

இளையதளபதி விஜய் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். ஆமாங்க… காவலன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டை அமெரிக்காவில் அரங்கேற்றியிருக்கிறார் விஜய். சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் “காவலன்” படத்தின் ட்ரைலர் கலிபோர்னியாவில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா வரலாறில் ஒரு படத்தின் ட்ரைலர் வெளிநாட்டில் வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்னும் பெருமை “காவலன்” படத்திற்க்கு கிடைத்துள்ளது.
மேலும், கலிபோர்னியாவில் உள்ள இந்திய மத்திய தொடர்பகத்தில் (India Community Center)நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையதளபதி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரசிகர்களுடன் கலந்துகொண்டார் விஜய்.
“காவலன்” படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிருக்கும் தந்திரா நிறுவனம் (Tantra Films)உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

ரெஸ்ட் எடுக்கும் மங்காத்தா

ரெஸ்ட்டில்தான் இருக்கிறார் அஜீத்! விறுவிறுப்பாக ஆரம்பித்த மங்காத்தா, ஸ்…அப்பாடா என்று காலை மடக்கி உட்கார்ந்திருக்கிறதாம். பாங்காக்கில் கடைசியாக நடைபெற்ற ஷ§ட்டிங் நாட்களை தொடர்ந்துதான் இப்படி ஒரு நீண்ட ரெஸ்ட்! இந்த நாட்டில்தான் தயாரிப்பாளருக்கு பிளட் பிரஷர் வருகிற அளவுக்கு ‘பில்’லேற்றம் செய்திருக்கிறார்கள் வெங்கட்பிரபு உள்ளிட்ட யூத் யூனிட்!
சென்னைக்கு வந்து சேர்ந்ததும் கணக்கு வழக்கை கவனித்த தயாரிப்பாளர் அடுத்த ஷெட்யூல் எப்போன்னு சொல்றேன். அதுவரைக்கும் பொறுங்க என்று கூறிவிட்டாராம் அஜித். அதுவரைக்கும் சும்மாயிருக்க முடியாதல்லவா? எடுத்த வரைக்குமான படத்தை எடிட்டிங் செய்வது, அதையே மேலும் மேலும் மெருகேற்றுவது என்று தினமும் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
எத்தனை நாளைக்குதான் இப்படியே இருக்க முடியும்? அடுத்த ஷெட்யூல் எப்போ சார்? என்கிறாராம் அப்பாவியாக. “சொல்றோம். காத்திருங்க” என்கிறார்களாம் அதே ஸ்லோமோஷனில். இந்த இடைபட்ட நேரத்தில் தன் மகளுடன் விளையாடுவது, பத்திரிகைகளில் வரும் அரசியல் செய்திகளை படித்து அடக்கம் காப்பது என்று நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறார் அஜீத்!

வெற்றிநாயகிகளுடன் முருகதாஸ் கூட்டணி

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசும், ஹாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் நாயகிகளாக நடிகை அஞ்சலியும், நடிகை அமலா பாலும் நடிக்கவிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட் நிறுவனத்துடன், டைரக்டர் முருகதாஸ் ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து முதல் கூட்டுத் தயாரிப்பாக உருவாகவிருக்கும் படத்தினை முருகதாஸின் அசோசியேட் சரவணன் இயக்கப் போவதாக அறிவித்தனர்.
இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டான இந்த படத்தின் நாயகர்களாக நடிகர் ‌ஜெய்யும், நடிகர் விமலும் நடிக்கிறார்கள். நாயகிகள் முடிவு செய்யப்படாத நிலையில், இப்போது அஞ்சலியும், அமலா பாலும் அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னமும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் எதிர்பார்ப்பு!

பாண்டியராஜனின் ஆண்பாவம் ப்ளாஸ்பேக்

வெறும் 17 லட்சத்தில் முதல் பிரதி! தமிழ்சினிமாவில் வெள்ளிவிழா கண்ட ‘ஆண்பாவம்’ வசூலித்ததென்னவோ கோடிகளில்! அப்படம் வெளிவந்து 25 வருடங்கள் ஓடிவிட்டன. படத்தின் நாயகனும் இயக்குனருமான பாண்டியராஜனுக்கு ஆண்பாவத்தின் ஸ்கீரின்பிளேவை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று ஆசை! அதுவும் பெரிய விழாவை ஏற்பாடு செய்து…
“நல்ல விஷயம். செய்ங்க” என்றார்கள் சிலர். “டைம் வேஸ்ட், பணம் வேஸ்ட்” என்றார்கள் சிலர். ஆனால் அப்பாவின் ஆசைக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வந்தது பாண்டியராஜனின் மகன்களும், மனைவியும்தான். அழைப்பிதழில் யார் பெயரையும் போடவில்லை. ஆனால் நேரில் போய் அழைத்தார் பாண்டியராஜன். அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், கவிப்பேரரசு வைரமுத்து, பாண்டியராஜனின் குருநாதர் பாக்யராஜ் என்று அரங்கம் நிறைந்தது.
“இசைஞானி இளையராஜாவை பார்த்து அழைப்பிதழ் கொடுத்தேன். இன்விடேஷனை அவர் காலடியில் வச்சுட்டு நிமிர்ந்தபோது என்னையறியாமல் கரகரன்னு அழுதுட்டேன். என் தோளில் தட்டிக் கொடுத்த இசைஞானி, யார் உதவியும் இல்லாமல் சினிமாவில் நுழைஞ்சதை நினைவுபடுத்தினார். ராஜா சாரின் அம்மா அவரை சென்னைக்கு அனுப்பிய கதையையும் அப்போ சொன்னார். ‘வீட்டில் இருந்த ரேடியோவை 400 ரூபாய்க்கு விற்று என்னை அனுப்பினாங்க. அதில ஒரு ஐம்பது ரூபாயை என்னிடம் கொடுத்திட்டு போன்னு கூட கேட்கலை எங்கம்மா’ என்று அவர் சொன்னபோது நான் இன்னும் குலுங்கினேன்” என்றார் பாண்டியராஜன்.
“அன்னைக்கு நல்ல மழை. இதே மாதிரி ஒரு மழைநாளில்தான் என் ஆண் பாவமும் ரிலீஸ் ஆச்சு. இந்த விழாவில் நடந்த மாதிரியேதான் அன்னைக்கும். அரங்கத்தில் கூட்டமே இல்லை. நேரம் செல்ல செல்ல அரங்கத்தை விட்டு வெளியே நிற்கிற அளவுக்கு கூட்டம். ஆண்பாவமும் அப்படிதான். முதல் ஷோவுக்கு ஆளே இல்லை. போக போக டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கிற அளவுக்கு தியேட்டர் நிறைந்தது” என்று அந்த நாட்களையும் அசை போட்டார் பாண்டியராஜன்.
“இந்த படத்தின் இன்னொரு ஹீரோவான பாண்டியன் இன்னைக்கு உயிரோட இல்லை. முக்கிய வேடத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி எங்க இருக்காங்க? உயிரோட இருக்காங்களான்னும் தெரியல. ஒரு மாசம் முழுக்க அலைஞ்சு அப்படத்தில் வேலை செய்த டெக்னீஷியன்களை தேடிக்கண்டு பிடிச்சேன். எல்லாரையும் மேடையில் ஏற்றி கவுரவம் செஞ்சேன். மனசு நிறைவா இருந்திச்சு” என்றார் பாண்டியராஜன். படத்தில் நடித்த ஒரு நாயகியான ரேவதி வந்திருந்தார். ஆனால் இன்னொரு நாயகியான சீதா வெளி மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தாராம். வரவில்லை.
சினிமாவில் ஏற்ற தாழ்வுகள் இரண்டையும் பார்த்துவிட்டார் பாண்டியராஜன். அஞ்சாதே படத்திற்கு பிறகு வேலாயுதம், திருத்தணி, காசேதான் கடவுளடா, ஓடிவா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது. சின்னத்திரையிலும் இப்போது பிஸி அவர். மாமா மாப்ளே என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படியே தபாலில் எம்.ஏ முடித்துவிட்டு எம்.பில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ‘தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு’ இதுதான் பாண்டியராஜன் படித்துவரும் எம்.பில் க்கான சப்ஜெக்ட்

ரஜினியுடன் பட்டையை கிளப்பும் சந்திரமுகி 2

சந்திரமுகியின் இரண்டாம் பாகம் நாகவள்ளி எனும் பெயரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தி்ல ரஜினி வரும் ஒரு காட்சியில் திரையரங்குகள் அதிர்கின்றன, ரசிகர்களின் விண்ணைப் பிளக்கும் கரகோஷம் மற்றும் விசில் சத்தத்தில். கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆப்தமித்ரா, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க சந்திரமுகியாக வெளியாகி, 804 நாட்கள் வரை ஓடி சரித்திரம் படைத்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தரக்ஷகா என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை மீண்டும் ரஜினியை வைத்து சந்திரமுகி – இரண்டாம் பாகம் என உருவாக்க விரும்பினார் வாசு. ஆனால் முதலில் பார்க்கலாம் என்று கூறிய ரஜினி, பின்னர் அஜீத்தை நடிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார்.
ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறாத நிலையில், வெங்கடேஷை வைத்து தெலுங்கில் இயக்குமாறு பரிந்துரை செய்தார் ரஜினி. கூடவே, அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் கொடுத்தார் ரஜினி. ஆனால் இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டது. இப்போது படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார் ரஜினி. அவரது கதைப்படி ரஜினியின் சிஷ்யர்தான் படத்தின் ஹீரோ வெங்கடேஷ். இந்தக் காட்சிக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரசிகர்கள் அபார வரவேற்பு கொடுத்து மகிழ்கின்றனர்.
வெங்கடேஷ், அனுஷ்கா, கமலினி முகர்ஜி, வினய் பிரசாத் நடித்துள்ள இந்தப் படம் வெளியான இன்றே வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிப்புத் துறையில் 25-ம் ஆண்டில் கால்பதிக்கும் வெங்கடேஷுக்கு மிக முக்கிய படமாக நாகவள்ளி அமைந்துள்ளது

3 இடியட்ஸ் குழப்பும் சூர்யா..

ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து விஜய் விலகிவிட்டார் அல்லவா… இப்போது அவருக்குப் பதில் இந்த பாத்திரத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என புரியாத அளவுக்குப் பேசி குழப்பினார்.
இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது..” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அட, யார்தான் நடிக்கிறீங்கன்னு சொல்லித் தொலைங்கப்பா… பெரிய ராணுவம் ரகசியம் பாருங்க!

வானம் ரிலீஸ் எப்போது??

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்’. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.

“அவன் இவன்” வரும் நேரம்

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா

கார்த்திக்கு காமெடி டைரக்டரின் ஆக்ஷன் படம்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு ராஜேஷ்க்கு கிடைத்த வாய்ப்பு, தமிழ் நாட்டின் பெரிய தயாரிப்பு நிறுவனரை இயக்கும் வாய்ப்பு, வேற யார் நம்ம உதயநிதி ஸ்டாலின் தான் அதற்கான கதையில் ராஜேஷ் பிஸி, படத்தில் நடிக்க டான்ஸ், சண்டை பயிற்சியில உதயநிதி பிஸி. அதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.
ஆனால் காமெடி படமே போரடிக்குதுன்னு சொல்லிட்டு இருந்த ராஜேஷ் அடுத்து ஆக்சன் பட வாய்ப்பு கதவை உடைத்திருக்கிறது.  அது கார்த்தி சிவக்குமார் நடிக்க வழக்கம்போல் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜன் தயாரிக்கிறார். உதயநிதி படம் முடிந்ததும் இந்த படம் வேகமாக ஆரம்பிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.

மன்மதன் அம்புவை சமாளிக்குமா ஈசன்??

சுப்ரமணியபுரத்துக்கு அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிக்குமார் இயக்கத்தில் ஈசன் இந்த வெள்ளியன்று திரையை அலங்கரிக்கவிருக்கிறது. . இந்த வெள்ளியன்று ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடபட்டிருந்த மன்மதன் அம்புவை எதிர்க்க சசிக்குமாரின் ஈசன் தயாராகவிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராசியான ஜோடி என்று அடையாளப்படுத்தப்படும் ஹீரோ – ஹீரோயின் ஜோடியை செண்டிமெண்டாக எப்பாடு பட்டாவது அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளர்கள் சேர்ந்து நடிக்கவைத்து விடுவார்கள். அவ்வாறான ஒரு ஸ்டார் ஸ்டேடஸ் சசிக்குமார் – சமுத்திரக்கனி ஜோடிக்கும் இருக்கிறது.
சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரத்தில் சமுத்திரக்கனிக்கு முக்கிய வேடம்; பின்னர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகளில் சசிக்குமாருக்கு முக்கிய வேடம். இப்போது சசிக்குமாரின் ஈசனில்  சமுத்திரக்கனியின் turn.
கிராமிய சூழலை பின்னணியாக கொண்ட முதல் படமான சுப்ரமணியபுரத்தை இயக்கிய சசிக்குமார், ஈசனில் நகரச்சூழலை அதுவும் சென்னையின் இரவுச்சூழலை பின்னணியாக கொண்டு இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் கும்பலில் பின் தளத்தில் இந்தப்படம் அமைந்திருக்கிறது.
சமுத்திரக்கனி ஸ்ட்ரிக்டான (!!) போலீஸ் ஆபிசராக களமிறயிருக்கும் ஈசனில், சசிக்குமாரின் வேண்டுகோளுகிணங்க எடையை குறைத்து, உடம்பை முறுக்கியிருக்கிறாராம். உழைப்பின் முழு பலனும் வெள்ளியன்று தெரியும் ..
அடுத்த வாரம் மன்மதன் அம்பு ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்க, அதற்காக விஜயின் காவலனே பொங்கலுக்குத் தள்ளி போய் இருக்கிறது. ஆனால் சசிக்குமார் துணிந்து ரிலீஸ் செய்கிறார். அடுத்தவாரம் மன்மதன் அம்புவுடன் நேரடியாக போட்டியில் இருக்கும் ஒரே படம் ஈசன் மட்டுமே.. பார்க்கலாம்..ஈசனா? அம்புவா?

3 இடியட்ஸ்க்கு லீவ் விட்ட சத்தியராஜ்

கைநிறைய சம்பளம், கணிசமான அட்வான்ஸ். சத்யராஜை சந்தோஷப்படுத்திய த்ரி இடியட்ஸ், அதே வேகத்தில் அவரை முடக்கியும் போட்டுவிட்டது. இந்த படத்திற்காக ஒதுக்கிய கால்ஷீட் தேதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்புவரை நிரப்பப்படாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.
வீணாதானே போவுது, த்ரி இடியட்ஸ் துவங்குவதற்குள் வேறொரு படத்தில் நடித்துவிட்டு வந்திடலாமே என்று நினைத்தாராம். அந்த நேரம் பார்த்துதான் அழைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கவிருந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் கழன்று கொண்டார் அமீர். இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலிருந்த எஸ்.ஏ.சி சத்யராஜிடம், உடனே ஷுட்டிங் போகணும். தேதி தர முடியுமா? என்றாராம்.
தானா ஊர்ற கேணிய மேலும் பத்தடி தோண்டுன மாதிரி, சும்மாயிருந்த சத்யராஜை சொடக்கு போடுற நேரத்தில் கமிட் பண்ணினாராம் எஸ்.ஏ.சி. சத்யராஜுக்கு ஏற்றது போல புரட்சி, போராட்டம் என்று கதையில் காரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

1 மாதத்திற்கு நோ சண்டை – சூர்யா கண்டிஸன்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் 7ஆம் அறிவு. முருகதாஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஆக்ஷன் காட்சியில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த சூர்யா சண்டை காட்சிகளில் தொடர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு, ‘ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது முதுகெலும்பில் அடிபட்டது. இதனால் 1 மாதத்துக்கு பின்பே சண்டை காட்சிகளில் நடிப்பேன்’ என்று கூறினார்.

சிம்பு சொல்லும் புது செய்தி

தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு பாடலை பாடி விடுகிறார் சிம்பு. சிம்புவின் வற்புறுத்தல் காரணமாகவே அவரது ஒவ்வொரு படத்திலும் பாடி வருகிறார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிம்பு இதனையை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘இசையை கற்றதில்லை. ஆனால் என் குரல் பலருக்கு பிடித்திருப்பதால் பாடுவதற்கு வாய்ப்புகள் வருகிறது தவிர நான் எந்த இயக்குனர்களையும் வற்புறுத்தியதே இல்லை’ என்கிறார் சிம்பு.

ரஜினி நடிக்க விரும்பிய இயக்குனர்

பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் படத்தில் நடிக்க விரும்பினேன், என சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார். சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர் இயக்குநர் கே விஸ்வநாத்.
இவர் அதிகமாக கமல்ஹாஸனை வைத்து மட்டுமே படங்கள் எடுத்தார். ஆனால் ரஜினியுடன் இணையவில்லை. விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியின் நீண்டநாள் விருப்பமாக இருந்துள்ளது. இதுபற்றி ரஜினி சமீபத்தில் கூறுகையில், “கே. விஸ்வநாத்தை விமான நிலையத்தில் ஒருமுறை சந்தித்தேன். அப்போது சாகரசங்கமம் அவருடைய மெகா ஹிட் படம்.
நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் இயக்கும் படமொன்றில் நான் நடிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் விஸ்வநாத் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு அந்த படமும் எடுக்கப்படாமலேயே நின்றுவிட்டது.
விஸ்வநாத் படத்தில் நான் நடித்திருந்தால் அவர் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருந்திருக்கும்…” என்றார் ரஜி னி.ரஜினி விருப்பம் பற்றி விஸ்வநாத்திடம் கேட்ட போது, ரஜினியை வைத்து படம் எடுக்க இப்போது கூட காலம் கடந்து விடவில்லை, என்றார்.

பஞ்ச் பேசும் ஷமீரா ரெட்டி

அசல் திரைப்படம் முதலுக்கே மோசம் வைத்துவிட்டதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சமீரா ரெட்டி. கவுதம் மேனன் படம் தவிர வேறு படங்கள் இல்லாத நிலை.
இப்போது மீண்டும் அவருக்கு தனியாகக் கலக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பிரபுதேவா மூலம். விஷாலை வைத்து அவர் இயக்கும் அடுத்த படத்தில் சமீராதான் நாயகி. விஷாலின் உயரத்துக்கு பக்காவாகப் பொருந்துவார் என்பதால் இவர்தான் மெயின் ஜோடி. சைடில் குத்தாட்டம் போட வேறு நாயகிகளும் உண்டாம்.
இந்தப் படத்தில் சமீராவின் பெயரே பஞ்ச்லைன் பாரு. ரொம்ப துடுக்கான பாத்திரமாம். எங்கும் எதிலும் ஒரு பஞ்ச் வைப்பது படத்தில் இவர் ஸ்டைலாம்.
கடந்த வெள்ளியன்று படப்பிடிப்பு துவங்கியது. விஷால் இன்னும் பாலாவின் ‘கஸ்டடியிலிருந்து’ வரமுடியாததால், இப்போதைக்கு சமீரா – விவேக் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறாராம்!! நேற்று சமீராவின் பிறந்த நாள். அதை பிரபு தேவா உள்பட யூனிட்டே கொண்டாடியதில், சமீரா செம குஷியாகிவிட்டாராம்!



நந்தலாலா தோல்விதான் – மிஷ்கின்

தமிழ் விமர்சகர்களால் பெரும் பாராட்டும், பெரிய திருட்டு என்றும் பெயர் வாங்கியபடம் நந்தலாலா. காமராஜர் அரங்கத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய மிஷ்கின் இந்த படம் காப்பி அல்ல என்றும், நான் கிஜிகுரோ வை அதிகம் பார்த்தவன் அதன் பாதிப்பில் படம் எடுத்தால் படம் அப்படித்தானே இருக்கும் என்றும் பேசினார். மேலும் இந்த படத்திற்கு படித்தவர்கள் செய்யும் விமர்சனத்தால் படம் தோல்வி படமாக மாறியுள்ளது. படம் இன்னும் சிலநாட்களில் தியேட்டரை விட்டு எடுக்கப்பட்டுவிடும் என்று கூறினார்.
இந்த படத்திற்கு நான் பட்ட கஷ்டத்தை யாரும் பேசவில்லை, நான் காப்பி அடித்துவிட்டேன் என்று அனைவரும் திட்டுவதுதான் என்னை மிக கஷ்டப்படுத்துகிறது என்றார். யார் என்ன சொன்னாலும் இந்த படத்திற்கு எனக்கு கிடைக்கவேண்டிய பெருமை கிடைத்துவிட்டது என்றும் கூறினார்.

ஜீவாவுக்கு கைகொடுக்காத விஜய்

விஜய் இதில் நடிக்கிறார் என்பதாலும், படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதாலும்தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் ஜீவா. ஆனால் அப்படத்தில் இப்போது விஜய் இல்லை. (படமே இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அது வேறு விஷயம்) என்ன காரணம் என்பதை வேண்டுமளவு அலசி ஆராய்ந்தாச்சு என்பதால் அடுத்த மேட்டருக்கு போவோம்.
ஜீவா ஹீரோவாக நடிக்கும் ‘கோ’ படத்தில் ஒரு பாடல் காட்சி இடம்பெறப் போகிறது. அதில் தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வரியை திரையில் வந்து பாடிவிட்டு செல்வதாக காட்சி. கிட்டதட்ட ஒரு ஆல்பம் போலிருக்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஆனால் இந்த ஸ்டார் கேங்கிலிருந்து முதல் செங்கல் உருவப்பட்டிருக்கிறது. உருவியவர் சாட்சாத் விஜய்தான். சூர்யா, சிம்பு, விக்ரம், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி என்று பலரும் தலைகாட்ட சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் விஜய் மட்டும் “ஸாரி. என்னால முடியாது” என்று கூறிவிட்டாராம். இவருக்காக நாம 3 இடியட்ஸ் ஒப்புக்கொண்டோம் ஆனா இவர் இப்படி சொல்லிட்டாரேன்னு பீலிங்க்ல இருக்காரு ஜீவா.

தேராதத் தியேட்டர்களில் காவலன்


விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்.  அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன்.
கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.
இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏன்?
காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு ‘உண்மை’யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும். இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு ‘பாசவலை’ கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில். “ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே…”, என்கிறார்கள்.
தன்னைச் சுற்றிலும் கணக்காக ‘ஆப்பு’ வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.

அசினின் சோகம், இலியானாவின் சந்தோசமும்..

2வது ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என ஒத்த காலில் நின்ற அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் பயற்த போன அசின் பிரியங்கா சோப்ரா படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க விருப்பும் தெரிவித்தார். எல்லாம் தன் கைக்கு வரும் நிலையில் 2வது ஹீரோயினாக நடிக்க அதிக சம்பளம் கேட்டாராம் அசின், இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அசினுக்கு பதிலாக இலியானாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். மேலும் இதற்கு அந்த பட இயக்குனர் அனுராக் பாசு ஒப்புக் கொண்டுள்ளார்.











அஜித்தை கை விட்ட கெளதமுக்கு கிடைத்த ரிவிட்

தமிழில் பெரிய டைரக்டர் என்று பெயரெடுத்த கெளதம் மேனனின் பெரிய வெற்றிப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப்படத்திற்கு பிறகு அஜித்தின் துப்பறியும் ஆனந்த் படம் செய்வதாக சொல்லப்பட்டது, ஆனால் இதற்கிடையே கெளதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஆரம்பித்தார் கெளதம்.
அஜித்திடம் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதாக தெரிவித்திருக்கிறார் கெளதம். ஆனால் அஜித் ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே என்ற நிலையில் ரொம்ப வருடங்களாகவே இருந்து வருகிறது. நடிகரே இப்படி இருக்கும் போது இயக்குனர் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் செய்வது சரியாக இருக்காது என்று அவருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத கெளதம் மேனன் அஜித்தை வசைமாறிப்பொழிய ஆரம்பித்தார். அஜித் எதும் சொல்லாமல் வெங்கட் பிரபுவுடன் மங்காத்தாவை ஆரம்பித்து கிளம்பிவிட்டார்.
மங்காத்தாவில் நடிக்கிறார் என்பதற்காக ஹிந்தி விண்ணைத்தாண்டிவருவாயா படத்தில் இருந்தும், சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் திரிஷா. ஹிந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கு பதில் மதராஸ்ப்பட்டிணம்  புகழ் எமி ஜாக்சனை புக் பண்ணி இருந்தார் கெளதம்.
ஆனால் ஹிந்தி படத்திற்கு பாப்பர் என்ற முண்ணனி நாயகனை கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தார் கெளதம். ஆனால் அவர் வேறு படங்களின் பிஸியாக இருப்பதால் இவரின் படத்திற்கு இப்போதைக்கு தேதி தரும் நிலையில் இல்லை என்று கை விரித்துவிட்டார் பாப்பர். மேலும் எமிக்கு இந்திய பெண்களுக்குரிய பாவம் எதுவுமே வரவில்லை, எவ்வளவு முயற்சித்தும் தோல்வியே கிடைத்திருக்கிறது கெளதமுக்கு. வேறு வழியில்லாமல் படத்திற்கு வேறு நாயகனோ, நாயகியோ தேடி ஆரம்பிப்பது முடியாத காரியம் என்பதால் படத்தை கைவிட்டார் கெளதம். இப்போதைக்கு அவருக்கு நடுநிசி நாய்கள் மட்டுமே கையில் இருக்கும் படம்.

அஜித் நடிக்கும் “வேட்டையன்” – சந்திரமுகி 2

பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகியின் இரண்டாம் பாகம் நாகவள்ளியை பார்த்து ரசித்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
விஷ்ணுவர்தன் நடிப்பில் உருவான கன்னட ஆப்தமித்ரா தமிழில் ரஜினி நடிக்க சந்திரமுகியாகி சரித்திரம் படைத்தது. ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம் ஆப்தரக்ஷகாவாக கன்னடத்தில் வெளியானது. இதன் தெலுங்குப் பதிப்பு நாகவள்ளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியின் சிஷ்யராக வருகிறார் ஹீரோ வெங்கடேஷ். ஒரு காட்சியில் ரஜினியும் வருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினிக்கு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் பி வாசு. தனது குடும்பத்தினருடன் வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தார் ரஜினி. படம் முடிந்ததும், பி வாசு அருமையாக திரைக்கதை அமைத்திருப்பதாகப் பாராட்டினார்.
இந்தப் படத்தை ரஜினியை வைத்து இயக்கத்தான் வாசு முதலில் திட்டமிட்டார். ஆனால் அவர் நடிப்பது சாத்தியமில்லாத சூழல் இருந்தது. எனவே தெலுங்கில் வெங்கடேஷை வைத்து எடுக்குமாறு அறிவுறுத்தினார் ரஜினி. அதன்படி உருவானதுதான் நாகவள்ளி.
இதன் தமிழ்ப் பதிப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் வாசு. படத்துக்குப் பெயர் வேட்டையன். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க, அஜீத் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தம்பி கார்த்தி்யால் காத்துவாங்கும் சூர்யா!

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்தவாரம் வெளிவந்த படம் “ரத்தசரித்திரம்”.  முன் வரிசையில் ஆரம்பித்து பால்கனி வரை ரத்தம் தெறிக்கும் அளவிற்கு வெட்டு, குத்து காட்சிகள் அமைந்திருக்கும் படம் தமிழ் ரசிகர்களை குறைந்த பட்சம்கூட ஈர்க்கவில்லை. தியேட்டர் கரண்ட் செலவுக்குகூட தேறாத அளவிற்கு வசூல் மோசமாக இருக்கிறதாம்.  சில தியேட்டர்களில் பத்தே பத்து பேர் இருந்தாலும், படத்தை ஓட்டுங்கள் என்ற உத்தரவை போட்டுள்ளாராம் துரை தயாநிதி. ஆமாங்க… படத்தை வாங்கி வெளியிட்டிருப்பவர் இவர்தான்.
சூர்யா படத்தை தொடர்ந்து தம்பி கார்த்தி் நடித்திருக்கும் “சிறுத்தை” படத்தினை வெளியிடும் உரிமையையும் துரை தயாநிதிதான் வாங்கியுள்ளாராம். ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சிறுத்தை வெளியாகும் நேரத்தில் தியேட்டர் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவே சிறுத்தை வெளிவரும் வரை ரத்தசரித்திரத்தை ஓட்டச்சொல்லியிருக்கிறாராம்.
ஆக, தம்பிக்காக காத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் பாசமிகு அண்ணன்…



மங்காத்தா வதந்தியே – பதறும் வெங்கட்பிரபு

அஜீத் நடிக்கும் மங்காத்தா படம் கைவிடப்பட்டதாக வந்த செய்திகள் பதற வைப்பதாகவும், இதில் உண்மை ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அஜீத், திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மங்காத்தா. வெங்கட்பிரபு இயக்குகிறார். இது அஜீத்தின் 50-வது படம். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பண பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் படத்தை கைவிட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்ட போது, “மங்காத்தா படம் கை விடப்பட்டதாக வெளியான செய்தி என்னை மிகவும் பதற வைத்தது. படப்பிடிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் சுமூகமாக இருக்கும் நிலையில் இப்படியொரு பிரச்சினையை கற்பனையாக கிளப்பியுள்ளது சங்கடப்படுத்துகிறது. பாங்காக்கில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.
சென்னையில் தற்போது மும்பை தாராவி போன்ற செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மழையால் அரங்கு சேதமாகி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்தோம். வசன காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டு விட்டன.
எதற்காக இந்த மாதிரி செய்திகள் பரவுகின்றன என்றே புரியவில்லை”, என்றார்.

ராதா மகள் கார்த்திகாவுக்கு அதிஷ்டம்..

முன்னாள் ஹீரோயின் ராதா மகள் கார்த்திகா. தமிழில் ஜீவா ஜோடியாக ‘கோ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் நடித்துள்ள படம் ‘மகரம் மஞ்சு’. லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படம், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குனர் டேனி பாய்லுக்கு பிரத்யேகமாக மும்பையில் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்தி பாய்ல், கார்த்திகாவின் நடிப்பை பாராட்டினார். டேனி பாய்ல் இயக்க உள்ள ஹாலிவுட் படத்தில், கார்த்திகா நடிக்க இருப்பதாகவும் அவர் நடிப்பை பார்ப்பதற்காகவே டேனி பாய்ல் மும்பை வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிக்குபுக்கு ப்ரீத்திகா பேட்டி..

“சிக்கு புக்கு” படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் ஆர்யா காதலியாக நடித்தவர் ப்ரீத்திகா ராவ். இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை.
அவர் கூறியதாவது :
ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் பத்தி எழுதிக்கொண்டிருந்தேன். சில விளம்பரங்களிலும் நடித்தேன். அதைப் பார்த்து “சிக்குபுக்கு” வாய்ப்புக் கிடைத்தது. இதில் செட்டி நாட்டு பெண்ணாக நடித்தேன். இதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். படம் ரிலீசான அன்று பேஸ்புக்கில் ரசிகர்களிடம் பேசினேன்.
இரண்டே நாளில், மலேசியா, ஜெர்மன், இலங்கை, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டு 1256 ரசிகர்கள் பேஸ்புக்கில் இணைந்தனர். தமிழ் படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எனது முதல் படத்திலேயே இவ்வளவு ரசிகர்கள் என்னை பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து சிறந்த வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஓவர் கிளாமராக நடித்து என்னை நான் தொலைக்க விரும்பவில்லை. எனது அக்கா அம்ரிதா, நடிப்புக்கு ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா என கேட்கிறார்கள். நான் நடிக்க முடிவானதுமே அவள் என்னிடம் இருந்து பிரிந்துவிட்டாள். அவளது நடிப்பு சாயல் எதுவும் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்கான பிரிவு அது. கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் சில கதைகள் கேட்டுள்ளேன். இந்தியில் நடிப்பீர்களா என்கிறார்கள். நான் அதை தேடிச் செல்லவில்லை. வந்தால் ஏற்பேன்.

கேப்டனின் அடுத்த காமெடிக்கும் அவரே இயக்குனர்

“விருதகிரி” படத்தை தொடர்ந்து தம்முடைய அடுத்த படத்தையும், விஜயகாந்தே டைரக்ட் செய்யவுள்ளார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், விஜயகாந்த்தின் மச்சான் எல்‌.கே.சுதீஸ் தயாரிப்பில், கேப்டன் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் “விருதகிரி”. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. முதல்படத்திலேயே தமது முத்திரையை பதித்த கேப்டன் ஏக குஷியில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, தம்முடைய அடுத்த படத்தையும், அவரே டைரக்ட் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமது கட்சியினருடன் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள கேப்டன், விரைவில் தமது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்தபடமும் அவரது முந்தைய படங்களை போன்று ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் படமாக இருக்கும்.

ரேணிகுண்டா இயக்குனரின் பரிதாபநிலை..

ரேணிகுண்டா என்ற அற்புதமான படத்தை எடுத்து தமிழின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரானார் பன்னீர்செல்வம். கூவ வேண்டிய சேவல் குப்புற படுத்துக் கிடந்த மாதிரி, கலெக்ஷன் மட்டும் படத்தின் பாராட்டுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அப்படியும் பன்னீர் செல்வத்துக்கு கோடம்பாக்கத்தில் செம கிராக்கி.
சட்டென்று நெஞ்சை நிமிர்த்திய பன்னீர் செல்வம், சம்பளத்திற்கு ஆசைப்பட்டு தெலுங்குக்கு போனார். ஆனால் அங்கேயும் அட்வான்ஸ் வாங்கியதோடு கதை முடிந்தது. படம் வளரவேயில்லை. வேறு வழியில்லாமல் இங்கே அவர் திரும்பி வந்தபோது நாடகம் முடிந்து திரையை தொங்க விட்டுவிட்டார்கள். முன்பு வருந்தி வருந்தி அழைத்த பல தயாரிப்பாளர்கள் இப்போது பன்னீர் செல்வத்தை அங்கீகரிக்கவில்லை. மறுபடியும் ரேணிகுண்டா தயாரிப்பாளர் சக்கரவர்த்திதான் வாய்ப்பு கொடுத்தார் இவருக்கு.
ரேணிகுண்டா ஹீரோவான அதே ஜானியை வைத்து 18 வயசு என்ற படத்தை இயக்கி வந்தார் பன்னீர்செல்வம். திடீரென்று இப்படத்தின் ஷுட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டாராம் சக்கரவர்த்தி. ஜானி நடிக்கும் வேறொரு படமான ‘சந்திரபாபு’ படப்பிடிப்புதான் ஜரூராக போய் கொண்டிருக்கிறது.














No comments:

Post a Comment