தனுஷ் கட்டளை-கட்டுப்பட்ட ஹரி!
December 28, 2010 | 1 comment
பெண்டு நிமித்தினால் வேலை பார்க்க முடியாது என்றும், காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு மணிவரை மட்டும் நடிப்பதாக இருந்தால் மட்டுமே நடிப்பதாக கதாநாயகன் தரப்பில் கூறியதால் மறுபடி படப்பிடிப்புக்கு தயார் என தெரிவிக்கப்பட்டது. பாதி படம் முடிந்த நிலையில் பிரச்சனை எதற்கு என்று கதாநாயகன் வழியில் இப்போது, இயக்குநரும் சம்மதித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
அனுஷ்காவால் மாறிய காஞ்சனா கதை
December 28, 2010 | no comments
‘காஞ்சனா’ படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் கூறியது: அனுஷ்கா நடிப்பதாக இருந்த ‘காஞ்சனா” படத்தின் கதை அவர் நடிக்க முடியாமல் போனதையடுத்து முற்றிலும¢ மாற்றப்பட்டது. லட்சுமிராய் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அந்த கேரக்டர் படத்தில் இல்லை. ஆனால் மற்றொரு புதிய கேரக்டரை ஹைலைட்டாக சேர்த்திருக்கிறேன். அதை இன்னும் சில நாட்களில் தெரிவிப்பேன்.
இதற்கிடையில் தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் ‘ரெபல்” என்ற படத்தை இயக்குகிறேன். ஜனவரி 2வது வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. இது முழுக்க ஆக்ஷன் பின்னணியில் அமைந்த கமர்ஷியல் படம். இப்படத்தில் நான் நடிக்கவில்லை. டைரக்ஷன் மட்டும் செய்கிறேன். ஏற்கனவே தெலுங்கில் ‘மாஸ்’, ‘டான்’, ‘ஸ்டைல்’ என 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் ராசு மதுரவன் இயக்கும் ‘பக்கி” என்ற படத்தில் நடிக்க உள்ளேன். அதன் ஷூட்டிங்கும் ஜனவரியில் தொடங்கு
தீப்பிழம்பான எஸ்.ஏ.சி-சீமான்-சத்தியராஜ்!
December 28, 2010 | 3 comments
ஒருபுறம் மன்றம், மறுபுறம் அரசியல் என்று பரபரப்பாக இருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பரபரப்பு போதாதென்று ‘சட்டப்படி குற்றம்’ என்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், சீமான், இவர்களுடன் இன்னும் நான்கு இளைஞர்களும் நடிக்கிறார்களாம். அதில் இருவர் விக்ராந்த், மற்றும் ஹரிஷ் கல்யாண். (சிந்து சமவெளி ஹீரோ)
எஸ்.ஏ.சி படங்கள் என்றாலே கோர்ட், குமுற குமுற பேசும் வக்கீல்கள் என்று வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி. என்னதான் புரட்சிப்படம் என்றாலும், அதில் ஹீரோயின் என்று ஒருவர் இருந்தாக வேண்டுமே?
அது போகட்டும்… படத்தில் சீமான் பேசுகிற பாதி வசனங்கள் அவரே எழுதியது என்கிறார்கள். அப்படின்னா ஒரே தீப்பிழம்புதான்னு சொல்லுங்க.
நான் அரசியலுக்கு வந்தால்-அஜீத் ஸ்பெஷல் பேட்டி!
December 28, 2010 | 4 comments
இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நீங்களும் அரசியலில் இறங்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அஜித், எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்.
எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
சினிமா இல்லையேல் மீடியா இல்லை – செல்வமணி
December 28, 2010 | no comments
தமிழகத்தின் தலைநகரத்தில் மட்டுமே ஒலித்து வந்த திருட்டு விசிடி பிரச்சனையை டெல்லி வரை கொண்டு செல்ல நினைத்துவிட்டது தமிழ் திரையுலகம். அதன் ஒரு கட்டம்தான் தமிழகம் வந்த ராகுல் காந்தியை திரையுலகத்தினர் சந்தித்த நிகழ்ச்சி. எழுத்து மற்றும் ஊடக துறை சார்ந்த பிரபலங்களுடன் ராகுல் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில்தான் திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
அங்கு மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்பது இருக்கட்டும். திரையுலகை சார்ந்தவர்கள் வலியுறுத்திய முக்கியமான விஷயம் திருட்டு விசிடி! ஆனால் இதையெல்லாம் நீங்கள் டெல்லி வந்து என்னிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார் ராகுல்.
இந்த விவாதம் குறித்து ஒரு விழாவில் பேசிய இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ஊடகம் மற்றும் மீடியா நண்பர்களிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். “நாங்கள் ராகுல் காந்தியிடம் திருட்டு விசிடி பிரச்சனையை வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்த போது மீடியாவை சேர்ந்தவர்கள் ‘விஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சகஜம்தான். தவிர்க்க முடியாது’ என்று எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது. எங்கள் உழைப்பையெல்லாம் இந்த திருட்டு விசிடி சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் சினிமாவே அழிக்கப்பட்டுவிடும். நாங்கள் இல்லையென்றால் மீடியாவுக்கும் வேலை இருக்காது” என்றார்.
சமந்தாவின் தமிழ் ஆசை
December 28, 2010 | no comments
‘பாணா காத்தாடி’ படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா. ஆனால் தெலுங்கு வாய்ப்புகளுக்காக தமிழ்ப் படங்களை சமந்தா மறுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துல சின்ன ரோல்ல நடிச்சேன். அதே படத்தோட தெலுங்கு ரீமேக்ல த்ரிஷா வேடத்துல நடிச்சிருந்தேன். நல்ல பெயர் கிடைச்சது. இப்போ தமிழ்ல ‘பாணா காத்தாடி’ படம் மூலம் எனக்கு பிரேக் கிடைத்தது, தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் தெலுங்கு வாய்ப்புகளுக்காக தமிழ்ப் படங்களை நான் புறக்கணிக்கவில்லை என்று சமந்தா கூறினார்.
தென்மேற்குப் பருவக்காற்று-சீமான் புகழாரம்!
December 28, 2010 | no comments
மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்புடன் காட்டிய படம் என்று தென்மேற்கு பருவக் காற்றுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் கிராமத்தின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியுள்ள தென்மேற்குப் பருவக்காற்று படம்.
படம் முடிந்து வெளியே வரும் போது, நாம் தவற விட்ட வாழ்க்கையையும் கண்முன் இழந்த விட்ட மனித உறவுகளையும் எண்ணி கனத்தை மனதுடன் பெருமூச்செறிய வைக்கிறது, என்று கூறியுள்ளார்.
விமலின் களவாணி ஸ்டைல் ஒரிஜினல் கல்யாணம்
December 28, 2010 | no comments
நடிகர் விமல், தனது உறவினரும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பசங்க படத்தி்ன் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். மணப்பாறையை சேர்ந்த விமல் பசங்க படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த களவாணி படமும் சூப்பர் ஹிட். தற்போது எத்தன் படத்தில் நடித்து வரும் விமல், தனது தந்தை வழி உறவினரான அட்சயா என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா சென்னையில் உள்ள தனியார் மரு்ததுவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு அட்சயாவின் வீட்டில் எதிர்ப்பு வந்தது. டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் அட்சயாவை திருமணம் செய்து வைப்போம் என கூறிய பெற்றோர், அதற்காக டாக்டர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணிய காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தற்போது கும்பகோணத்தில் எத்தன் படப்பிடிப்பில் இருக்கும் விமலை சந்திப்பதற்காக மாணவி அட்சயா கும்பகோணம் சென்றார். பின்னர் இருவரும் சுவாமிமலை சென்றனர். அங்கு முருகன் கோயிலில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு விமலின் மனைவியாக மாணவி அட்சயா சென்னை சென்று விட்டார். நடிகர் விமல் கும்பகோணத்தில் தங்கியிருந்து சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
ரகசிய திருமணம் குறி்தது நடிகர் விமல் அளித்துள்ள பேட்டியில் :
அட்சயா எனக்கு மாமா மகள் முறைதான். சிறு வயதில் இருந்தே இருவரும் நட்பாக பழகினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் எங்கள் காதலை அட்சயாவின் வீட்டில் எதிர்த்தனர். அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன்.
வித்யாபாலன்-ராணி முகர்ஜி ஹாட் லிப் கிஸ் வீடியோ!
December 27, 2010 | no comments
வித்யாபாலனின் லிப்ஸை கவ்விய ராணி முகர்ஜி-படத்துடன்!
December 27, 2010 | no comments
“நாம் அடிக்கடி மோதிக் கொள்வதாக கிசுகிசு வருகிறது தெரியுமா?” என முகர்ஜி பேச்சை தொடங்கினார். ஆமாம், அதைப் பார்த்து அப்செட் ஆகியிருக்கிறேன். என்னைப் பற்றி நீ விமர்சித்ததாக சிலர் கூறினர். அதனால் அன்று முழுக்க மூட் அவுட் ஆகிவிட்டேன். பின் உன்னுடன் நான் போனில் பேசினேன். அப்போதுதான் எல்லாமே பொய் என தெரிந்தது. உண்மையிலேயே நமக்குள் மோதல் இல்லை.
‘இதை எப்படி வெளிப்படுத்துவது?’ என வித்யா பாலன் கேட்டார். “அதை வெளிப்படுத்த ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது என்றபடி” வித்யா பாலனை இழுத்து, அவரது உதட்டோடு உதட்டை பதித்து முத்தம் கொடுத்தார் ராணி.
கொட்டிக்கொடுத்தாலும் சுயசரிதைக்கும் நோ – ஐஸ்
December 27, 2010 | no comments
ஐஸ்வர்யா ராய் தனது காதல் சர்ச்சைகள் மற்றும் திருமணம் குறித்து சுயசரிதை எழுதினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று ஆசை காட்டியுள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சொந்த வாழ்க்கையை எழுதி விற்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்தது. மாடலிங்கில் கொடிகட்டிப் பறந்தது, உலக அழகிப் பட்டம் வென்றது, சினிமாவுக்கு வந்தது என மூன்று கட்டங்களைக் கொண்ட அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள்.
ஐஸ்வர்யா ராய்க்கும் சல்மான்கானுக்கும் காதல் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இருவரும் பிரிந்தனர். பின்னர் விவேக் ஓபராயுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதுவும் முறிந்தது. அதன் பிறகுதான் அபிஷேக் பச்சனைக் காதலித்து மணந்தார்.
ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் நடந்த இந்த காதல் – திருமண நிகழ்வுகளை மட்டும் புத்தகமாக்கி வெளியிட்டால் பரபரப்பான விற்பனையாகும் என்பதை உணர்ந்து வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று அவரை அணுகியது. ப்ளாங்க் செக்குடன் அந்த பதிப்பாளர் ஐஸ்வர்யா ராயை அணுகி, சுயசரிதையை எழுதி தருமாறு கேட்டாராம்.
ஆனால் சொந்த வாழ்க்கையை புத்தகம் எழுதி பகிரங்கப்படுத்த ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எத்தனை கோடி கொடுத்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையை புத்தகமாக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
தமிழில் நடிகையாக அறிமுகமான ஐஸ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு அவர் 5 பெரிய படங்களில் நடித்தார். ஆனால் ரஜினியுடன் நடித்த எந்திரன் மட்டுமே சிறப்பாக ஓடி, அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
கமலின் அடுத்தப்படம்
December 27, 2010 | no comments
மன்மதன் அம்பு வெளியான வேகத்தில் தனது அடுத்த அம்பை எய்யத் தயாராகிவிட்டார் கமல் ஹாஸன். இந்த முறை வெளிவரும் படம் தலைவன் இருக்கின்றான், அவரது சொந்த இயக்கத்தில் உருவாகும் படம் இது!
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும், தமிழில் இதுவரை யாரும் பெறாத அளவு பெரும் சம்பளம் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார். தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.
விஜய்க்கு கை கொடுக்கும் ஜெயா
December 27, 2010 | 4 comments
பல பிரச்சனைகளைத்தாண்டி காவலனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தியேட்டர்கள் முழுவதும் முடிவாக வில்லை. இதற்கிடையே பெரிய நிறுவனங்களின் நெருக்கல்களும் விஜய்க்கு வந்த விடாத நெருக்கடிகளும் விஜய்யின் தந்தை ஜெயலலிதாவைப்பார்க்கும் அளவுக்கு வளர்ந்தது. அதற்கான பலன் காவலன் சானல் உரிமைகளை ஜெயா டீவீ வாங்கப்போகிறது.
இதற்கு பிரதிபலனாக விஜய் அநேகமாக இந்த தேர்தலில் அதிமுக வுக்கு சாதகமாக முடிவெடுக்கலாம்.
பயந்து பதுங்கும் பயணம்
December 27, 2010 | 1 comment
நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், சனா கான் நடித்துள்ள படம் ‘பயணம்’. நவம்பர் 5ம் தேதி படம் ரிலீசாக இருந்தது. ஆனால், ரிலீஸ் தேதி பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொங்கலுக்கு விஜய்யின் காவலன், கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் ஆடுகளம், இளைஞன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. போட்டி கடுமையாக இருப்பதால் ஒரு சில படங்கள் பின்வாங்கும் என்கிறார்கள். அதில் பயணன் படமும் ஒன்று பொங்கலுக்கு வெளியாக இருந்த ‘பயணம்’, ஜனவரி இறுதியில் ரிலீசாகிறது.
மீனாட்சியின் புத்தாண்டு சபதம்
December 27, 2010 | no comments
புத்தாண்டு முதல் அசைவம் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். முழுமையாக சைவத்துக்கு மாறிவிடுவேன். கடந்த 2 வருடமாகவே அசைவம் சாப்பிடுவதை கைவிட முயன்று வருகிறேன். ஆனாலும் ஏதாவது ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு முதல் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதை உறுதியாக பின்பற்றுவேன். இது எனக்கு நானே எடுத்துக்கொள்ளும் சத்தியம். ‘இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? என்கிறார்கள். சைவ உணவுதான் உடலுக்கும், அறிவுக்கும் மிக நல்லது. உடலுக்கு தேவையான எல்லா சத்தும் சைவ உணவிலேயே இருக்கிறது.
அசைவம் சாப்பிடுவதால் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு எழுகிறது. நமது பசிக்காக ஒரு உயிரை கொல்கிறோமே என்ற உணர்வு மனதை உறுத்துகிறது. எனது வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்க விரும்புவேன். நாய்க்குட்டி வாங்கி தரும்படி என் அம்மாவிடம் கேட்பேன். ஆனால் ஷூட்டிங் என்று வந்துவிட்டால் நான் அவற்றை கவனிக்க மாட்டேன் என்று எண்ணி வாங்கி தரமாட்டார். தொந்தரவு தாங்க முடியாமல் நாய்க் குட்டிக்கு பதிலாக கோழி குஞ்சுகளை வாங்கித் தருவார். அவை வளர்ந்தபிறகு யாரிடமாவது கொடுத்து விடுவேன். பிறகு மீண்டும் கோழி குஞ்சு வாங்கித் தருவார். அவற்றிடம் கொஞ்சி விளையாடுவேன். அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறுவதற்கு இதுவும் முக்கிய காரணம்.
டிஸ்கி : கோழி வளர்ப்பை பற்றி பேசியவர் முயல் எப்படி வளர்க்கிறார் என்று சொல்லவே இல்லை.. 
தீபிகாவின் 4 படுக்கையறை கொண்ட வீடு 16 கோடி!
December 29, 2010 | no comments
தீபிகாவும் அவருடைய தந்தை பிரகாஷும் சேர்ந்து 16 கோடிக்கு இந்த வீட்டை வாங்கியுள்ளனர். பிரகாஷ் படுகோனே முன்னாள் தேசிய பேட்மிண்டன் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பீயுமொண்டே டவர்ஸ்’ மூன்று வானளாவிய குடியிருப்பு கட்டிடங்களைக் கொண்ட வளாகமாகும். இதில் தீபிகாவின் வீடு ‘பி’ டவரில் இருக்கிறது. தீபிகாவும் அவருடைய தந்தையும் ஃபோர்ட் பகுதியில், பழைய கஸ்டம்ஸ் ஹவுசில் உள்ள சொத்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று பத்திரத்தை பதிவு செய்தனர்.
ரம்பா வீடு தாக்குதல்
December 29, 2010 | no comments
உள்ளத்தை அள்ளித்தா’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. இவரது வீடு சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவில் உள்ளது. ரம்பாவுக்கும், கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த ரம்பா, திருமணம் முடிந்ததும் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். கனடாவில் வசிக்க ஆரம்பித்தார். சென்னைக்கும் அடிக்கடி வந்து, தனது வீட்டில் தங்குவார். சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் கனடா சென்றார். வீட்டில் வாட்ச்மேன் தீன் டெக்ரூஸ் (45) என்பவர் மட்டும் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டின் மீது 2 பேர் பைக்கில் வந்து டியூப் லைட்டை வீசி தாக்குதல் நடத்தினர். டியூப் லைட் வெடித்து சிதறியதால் பயங்கர சத்தம் கேட்டது. வாட்ச்மேன் ஓடி வருவதற்குள் பைக்கில் வந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இது குறித்து, விருகம்பாக்கம் போலீசில் தீன் டெக்ரூஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சிலர் ரம்பா வீட்டின் அருகே மது அருந்தியுள்ளனர். இதைப் பார்த்து வாட்ச்மேன் சத்தம்போட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆசாமிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரம்பா வீட்டில் டியூப் லைட்டால் நடத்தியது சாலிகிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முடிவுக்கு வந்த நயன்தாரா வாழ்க்கைப் பிரச்சனை
December 29, 2010 | no comments
பிரபு தேவாவும் ரம்லத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தனர். பிரபுதேவாவின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திரையுலகின் முக்கியப் புள்ளிகள் ஆதரவுடன் இந்த திருமணம் நடந்தது. ஆனாலும் தன் மனைவி, குழந்தைகள் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தார் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் பிரம்மச்சாரி என்றும் ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மனைவி ரம்லத் மற்றும் அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகள் குறித்து ஆனந்த விகடன் பேட்டியில் ஒப்புக் கொண்டார்.
இந்த பேட்டி வெளியான சில மாதங்களில் பிரபு தேவாவின் மூத்த மகன் கேன்சரில் இறந்தார்.
அப்போது வில்லு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பிரபுதேவா. விஜய் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகி. இந்த படத்தில் பணியாற்றும்போது நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு காட்டினார் ரம்லத். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வருவதையே பிரபு தேவா நிறுத்திக் கொண்டார். நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். அதற்கு வசதியாக புதிய பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார் நயன்.ய
இந்த நிலையில், நயன்தாராவை திருமணம் செய்து கொள்வேன் என்று பகிரங்கமாக பேட்டியளித்தார் பிரபுதேவா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி உயிருடன் இருக்கும்போதே, இரண்டாம் திருமணம் பற்றி பேட்டி தந்தது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. கொதித்தெழுந்த ரம்லத் நீதிமன்றத்துக்குப் போனார். பிரபு தேவா – நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு என்றும், மீண்டும் கணவர் தன்னுடன் வாழ வழி செய்யுமாறும் மனு செய்தார். இன்னொரு மனுவில், நயன்தாரா – பிரபுதேவா சேர்ந்து சுற்றக்கூடாது, பேட்டிகள் தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டன பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும். ஆனால் இருவரும் எந்த சம்மனையும் வாங்கவில்லை. இரண்டு முறை மனுக்கள் விசாரணைக்கு வந்தபோதும், அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
நீதிமன்றம் இவர்களுக்கு மூன்றாவது சம்மன் அனுப்ப உத்தரவிட்டு அமைதியாகிவிட, ரம்லத்துடன் செட்டில்மெண்ட் பேச ஆரம்பித்தது பிரபுதேவா தரப்பு. ரம்லத்தை கழட்டிவிடுவதில் பிரபு தேவா குடும்பத்தினரும் மிக ஆர்வமாக இருந்ததனர். அவர்கள் பிரபு தேவா – நயன்தாராவை முன்பே கணவன் மனைவியாக அங்கீகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர் பிரபுதேவாவும் ரம்லத்தும். வழக்கின் புதிய திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிந்துபோவதாக மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விரைவில் விசாரணையைத் தொடங்க உள்ளது. பரஸ்பர விவாகரத்து என்பதால், சீக்கிரமே இருவரும் விவாகரத்து பெற்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், இத்தனை நாளாக தொடர்ந்த பிரபுதேவா – ரம்லத் – நயன்தாரா குடும்ப விவகாரம் ஒரு முடிவுக்கு வருகிறது. விவாகரத்து பெற்ற கையோடு, நயன்தாராவை திருமணம் செய்கிறார் பிரபுதேவா. இந்த விவாகரத்துக்காக, ரம்லத்துக்கு பெரும் தொகையை செட்டில்மெண்டாக தர பிரபு தேவாவும் நயன்தாராவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர் இருதரப்பிலும்.
காவலன் லேட்டஸ்ட் படங்கள்-தொகுப்பு!
December 29, 2010 | 6 comments
விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள “காவலன்” பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.
காவலன் படத்தின் அனைத்து கண்கவர் படங்களைக்காண கீழேயுள்ள லிங்க்குகளை க்ளிக் செய்யவும் :
சிம்பு பிறந்த நாளில் ரிலீஸாகும் வானம்!
December 28, 2010 | 4 comments
ஆனால் ஜனவரியில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தி விட்டு, பிப்ரவரியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கணேஷ். முதலில் பிப்ரவரி 14 -ம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த வானம் குழுவினர், இப்போது அந்த முடிவில் இருந்து சிறிய மாற்றம் செய்துள்ளனர். அதாகப்பட்டது, “வானம்” படம் பிப்ரவரி 3-ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.
“வானம்” படத்தில் சிம்பு – யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடிய ஒரு பாடல் மட்டும் கொண்ட சி.டி., ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்ட நிலையில் மொத்த பாடல்களும் அடங்கிய சி.டி., ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்குப் பருவக்காற்று-விமர்சனம்!
December 28, 2010 | no comments
தமிழில் நல்லபடம் வருவதில்லை, நல்லப்படமா இருந்தா அது காப்பி அடிச்சது, தமிழ் சினிமாவே கார்ப்பரேட் கம்பெனிகள் கையில் இருக்கிறது இதெல்லாம் வக்கனையாக பேசும் நாமும் அதே கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் சுமாரான படங்களைத்தானே முதலில் பார்க்க ஓடுகிறோம்??
குவிந்து கிடக்கும் கூழாங்கற்கள் இடையே ஒழிந்து இருக்கும் வைரங்களைப்போல தமிழ் சினிமாவில் நல்லப்படங்கள் வராமல் இல்லை, அப்படி வந்தாலும் வசதி படைத்தவர்களின் விளம்பரங்களின் முன்பு மறைக்கபட்டு விடுவது தமிழ் சினிமாவை உயிருடன் புதைக்கும் நிகழ்வு. யதார்த்தம் என்ன விலை என்று கேட்ட எந்திரன் வசூல் சக்கரவர்த்தி, சுமாரா படம் மன்மதன் அம்பு தயாரிப்பாளரை குஷிப்படுத்துக்கிறது.
படத்தில் ஆடு மேய்ப்பவர் ஹீரோ. அம்மா பார்த்த பொண்ணுடன் வாழு ஒப்புக்கொண்ட நிலையில் தன் பட்டியில் இருந்து ஆட்டைத் திருடும் போது கதாநாயகியை சந்திக்கிறார். பிறகு கதாநாயகன் காட்டிகொடுப்பதால் ஆட்டைத்திருடிய கதாநாயகியின் குடும்பம் மொத்தமும் ஜெயிலுக்கு போகிறது. இதன் பிறகு நாயகனும், நாயகியும் மனதால் நெருங்குகிறார்கள். இருவர் வீட்டிலுமே எதிர்க்கிறார்கள். அவளை வேண்டாம் என்று சொல்ல சரண்யாவிற்கு ஒரு அழுத்தமான ப்ளாஷ் பேக் இருக்கிறது. காதலின் முடிவு வெண்திரையில் காண்க.
படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதையின் யதார்த்தத்தை அருமையாய் சொல்கிறது. படத்தில் நாயகனுக்குத்தான் கணம் குறைவான கேரக்டர். கதாநாயகி வசுந்தரா, அம்மாவாக சரண்யா, வசுந்தராவின் அண்ணன், தீப்பெட்டி கணேசன் அனைவருமே படத்தின் தூண்களாக இருக்கிறார்கள்.
படத்தில் புழுதிகளின் நடுவே நாமும் வாழும் உணர்வைத்தருகிறார் இயக்குனர். நாயகனுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வருபவரும் அவரின் அப்பாவாக வருபவரும் வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் பாராட்ட எவ்வளவோ இருக்கிறது. சீனு ராமசாமி படத்தின் பல இடங்களில் இயக்குனாராகவும் வசனகர்த்தாவாகவும் நிறைய இடங்களில் நம்பிக்கைத்தருகிறார்.
குத்துப்பாட்டு இல்லை, யதார்த்தம் மீறிய காதல் காட்சிகள் இல்லை, டூயட் இல்லை, பஞ்ச் வசனம் இல்லை, பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை, பெரிய கதாநாயகன் நாயகி இல்லை, காமெடிக்கு தனி ட்ராக் இல்லை, கவர்ச்சி இல்லை, தமிழ் சினிமாவின் வெற்றி பார்முலா வென்று சொல்லும் எதுமே இந்தப்படத்தில் இல்லை. ஆனாலும் ஒரு தரமான படத்தை நமக்கு தந்திருக்கிறார் சீனு ராமசாமி. இந்தப்படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் தன்னுடைய சிறந்த உழைப்பை இந்தப்படத்திற்காக தந்திருக்கிறார்கள்.
கண்டீப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். இது போன்ற படங்கள் வெற்றிப்பெற்றால் நல்லப்படங்கள் வர நாம் காரணமாவோம்.
No comments:
Post a Comment