அவன் இவன்-வலியால் துடித்த விஷால்!
படுகாயமடைந்தார். பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர்,
மது ஷாலினி நடிக்கும் படம் “அவன் இவன்”. இதில் ஆர்.கே. வில்லனாக
நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வத்தலகுண்டு அருகே நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன்
காட்சியை அமைத்தார். ஆர்.கே.வும் விஷாலும் மோதுவது போல் காட்சி
படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ரிஸ்க்கான காட்சியில் நடிக்க, டூப் போடலாம் என்று பாலா கூறினார்.
விஷால் மறுத்து, தானே நடிப்பதாக கூறினாராம். ஆர்.கே.வை நோக்கி
குதிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தவறுதலாக
வேறொரு இடத்தில் விழுந்தார் விஷால். இதில் அவரது இடது
தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
எழுந்துகொள்ள முடியவில்லை.
இதையடுத்து படக்குழுவினர் அவரைத்
தூக்கினர். அப்போது தோள்பட்டை
இறங்கியிருப்பது தெரிந்தது. வலியால்
துடித்த அவரை, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்
சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்த்துள்ளனர்.
வேங்கையான தமன்னாவுக்கு 22-திருப்பதி தரிசனம்!
ஹரி இயக்கும் “வேங்கை” படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தமன்னா.
இங்கு தனது 22-வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது :
“பிறந்த நாளுக்காக மும்பையில் இருந்து எனது பெற்றோரும்,
சகோதரனும் சென்னை வந்தனர். அவர்களுடன் நேற்று முன்தினம்
திருப்பதி சென்று சாமியை தரிசனம் செய்தேன். ஒவ்வொரு முறை
திருப்பதி செல்ல நினைக்கும்போது நேரம் இருக்காது. இப்போது சிறப்பாக
தரிசனம் செய்தேன். தமிழ், தெலுங்கில் இப்போது பிசியாக இருக்கிறேன்.
அடுத்த வருடமும் இந்த வருடம் போல் எனக்கு சிறப்பான தொடக்கமாக
அமையும்” என்றார்.
காவலனுக்கு அதிரடி நிபந்தனை!
நிதி நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கில் கூறியிருப்பதாவது :
அந்த வழக்கில் கூறியிருப்பதாவது :
பாடி கார்ட் என்ற மலையாள படத்தை தயாரிப்பதற்காக நிதி கேட்டு ஜானி
சகரிகா சினிமா ஸ்கொயர் நிறுவனம் எங்களை அணுகியது.
அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.3.90 கோடி கடன்
வழங்கினோம். அப்போது “பாடிகாட்” படத்தின் பிறமொழி பதிப்புரிமையை
எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கான ஒப்பந்தமும்
போடப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள “காவலன்” என்ற சினிமா,
‘பாடிகாட்’ படத்தின் கதையை கொண்டதாகும்.
“பாடிகாட்” கதையை மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமையை
கோகுலம் நிறுவனம்தான் பெற்றுள்ள நிலையில், அந்த கதையை
தழுவிய “காவலன்” படத்தை ரோமேஷ்பாபு தயாரித்துள்ளார். மேலும்
நாங்கள் கொடுத்த தொகையில் மீதி ரூ.1.88 கோடியை ஜானி சகரிகா
நிறுவனம் தரவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பித்தர
உத்தரவிட வேண்டும். எங்களிடம் பதிப்புரிமை உள்ளதால் மற்றவர்கள்
அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
“காவலன்” படம் வெளியிடப்பட்டு விட்டால், பாக்கி தொகையை திருப்பி
செலுத்த வேண்டிய பொறுப்பு, ஜானி சகரிகா நிறுவனத்துக்கு இருக்காது
. அதனால் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதே
நேரத்தில் பெரிய பட்ஜெட்டில் “காவலன்” படம் தயாரிக்கப்பட்டு
இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாவிட்டால் தனக்கு
பாதிப்பு ஏற்படும் என்று ரோமேஷ்பாபு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
எனவே 1 கோடியே 88 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு
“காவலன்” படத்தை திரையிடலாம் என்று உத்தரவிட்டார்.
தற்போது அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு வந்திருக்கும்
“காவலன்” பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இந்த
பொங்கல் தளபதி ரசிகர்களுக்கு “டபுள் ட்ரீட்டாக” அமையவிருக்கிறது
“காவலன்” மூலமாக.
நான் காதலிப்பது உண்மையே-மவுனம் கலையும் அனுஷ்கா!
சொல்ல விரும்பவில்லை என்கிறார் ஆந்திர ரசகுல்லா அனுஷ்கா.
இதுபற்றி அவர் கூறியதாவது :
என்னுடன் நடித்த பல தெலுங்கு ஹீரோக்களுடன் இணைத்து கிசு
கிசுக்கள் வந்துள்ளன. ஏன், ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து
வைத்துவிட்டார்கள். அவை எல்லாம் வதந்திதான். ஆனால் நான்
ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யாரென்று சொன்னால் பலரின்
புருவங்கள் உயரலாம் என்பதால் அவர் பெயரை சொல்ல
விரும்பவில்லை. அவர் என்னை அதிகமாக காதலித்து வருகிறார்.
இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை
முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வருடத்தில் எங்கள் திருமணம் நடக்கும்”
என்கிறார் கட்டழகி அனுஷ்கா.
வட போச்சே…!
சேரனின் ரூல், பீதியில் உதவி இயக்குனர்கள்
தன்னிடம் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் ஒரு படத்தில் வேலை
செய்வதோடு சரி. அடுத்த படத்திற்கு ஆளை தேடினால் எங்கும்
தென்படுவதில்லையாம். டுடோரியல் காலேஜ்களுக்கு கூட ரூல்ஸ்
இருக்கும் போது இப்படி பொறுப்பான பணியில் ஈடுபடுகிறவர்கள்
எவ்வளவு டெடிக்கேஷனாக இருக்க வேண்டும் என்றெல்லாம்
குமுறியவர் ஒரு திடமான முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்த திடமான முடிவு, மார்ல தடம் பதிக்கிற அளவுக்கு தாறுமாறாக
இருப்பதுதான் தாங்கவொண்ணா அதிர்ச்சி! சமீபத்தில் இவரிடம் வாய்ப்பு
கேட்க போன உதவி இயக்குனர் ஒருவரிடம் சேரன் வைத்த கண்டிஷன்கள்
யம்மாடியோவ்… ரகம். “தம்பி. முதல்ல ஐந்து லட்சம் டெபாசிட் கட்டுங்க
. மூன்று படங்கள் தொடர்ச்சியா வேலை செய்யணும். பயிற்சி முடிந்து
போகும்போது நான் ஒரு கான்டாக்ட் சர்டிபிகேட் கொடுப்பேன். நீங்க
கொடுத்த ஐந்து லட்சத்தையும் திருப்பி கொடுப்பேன். இந்த கண்டிஷனுக்கு
ஓ.கேவா?” என்றாராம்.
ரூம் வாடகை, மெஸ் பில்லுக்கே நாக்கு தள்ளும் உதவி இயக்குனர்களுக்கு
சேரனின் இந்த திடீர் புரட்சி பெரும் அதிர்ச்சியாக இருக்கிறதாம்.
ஹாட்ரிக் நடிகர் – படுகவர்ச்சிபடத்துடன்
மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். காரணம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை தேடித் தந்துள்ள “கந்தகார்” படம் தான்.
தமிழில் “அபியும் நானும்” படத்தின் மூலம் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம், தன்னுடைய அடுத்த படமான “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. தன்னுடைய இரண்டாவது படத்திலேயே மெகா ஸ்டார்கள் கமல் மற்றும் மோகன்லால் உடன் நடித்த கணேஷ், மூன்றாவது படமான “கந்தகார்” படத்தில் ஒருபடி மேலே போய் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
“கந்தகார்” படத்தில் ராணுவத்தில் பணிபுரியும் கமாண்டராக கணேஷ் வெங்கட்ராம் நடித்திருக்கிறார் . இவருக்கு அப்பாவாக அமிதாப்பும், ராணுவ மேஜராக மோகன்லாலும் நடித்துள்ளனர். கந்தகார் விமான கடத்தலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மலையாளத்தில் இப்படம் வெளியானது. படமும் செமஹிட்டாகியுள்ளது. அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களை தொடர்ந்து கந்தகார் படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை தேடித்தந்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
படத்தின் வெற்றி குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், கந்தகார் படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது. முதல் இரண்டு படங்களை போலவே, இந்த படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இந்த படத்தின் வெற்றி யாவும் இயக்குனர் மேஜர் ரவியையே சாரும். படத்தில் அமிதாப் சார் மற்றும் மோகன் லால் சாருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பின் போது இருவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். படமும் நன்றாக வந்துள்ளது.
கந்தகார் படத்தில் நடிக்க மோகன்லால் சார் என்னை சிபாரிசு செய்தார். இப்படத்திற்கு ஏற்ற பாத்திரம் கணேஷ் தான் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு, எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் தான் என்னுடைய “குரு”. மலையாளத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியிலும் இப்படம் வெளியாகயுள்ளது. ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. மலையாளத்தை போல தமிழ், இந்தியிலும் இப்படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நான் செய்த தவறு-வருத்தப்பட்ட விஜய்!
அவர்களிடம் பேசிய விஜய் :
உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்த ஆதரவை பயன்படுத்திக் கொள்ளாமல் சில வெற்றியடையாத படங்களை கொடுத்து விட்டேன் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அது நான் செய்த தவறுதான். ஆனால் இப்போது வர இருக்கும் “காவலன்” படம் நீங்கள் ரசிக்கும்படி இருக்கும் என நினைக்கிறேன். கத்தி, அருவா, துப்பாகி எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் ஒரு காதல் படத்தின் நடித்திருக்கிறேன் என்று ரசிகர்களிடம் சொன்ன விஜய், அவர்களிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். நீங்கள் வெளிநாட்டுக்கு கொடுக்கின்ற உழைப்பை, கொஞ்சம் தமிழ் நாட்டுக்கும் கொடுங்களேன் என்று சொன்னார்.
தீபிகா பேசும் தத்துவம்
திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். அதுகுறித்து இப்போதே எப்படி திட்டமிட முடியும் என்று பதிலளித்துள்ளார் பாலிவுட்டின் க்யூட் அழகிகளில் ஒருவரான தீபிகா. நடித்து வெளி வந்த படங்கள் கொஞ்சம்தான். ஆனால் தீபிகா குறித்து நிறைய செய்திகள். காதல், காதல் ரத்து, மறுபடியும் காதல் என்று ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் இந்த கன்னத்து குழியழகி குறித்து.
சமீப காலமாக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன், தீபிகா நெருக்கமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் சித்தார்த் மல்லையா தலைமையில் நடந்த கிங்பிஷர் காலண்டர் அறிமுக விழாவில் தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அப்போது அவரிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திருமணம் என்பது யாராலும் திட்டமிட முடியாது. அது நடக்க வேண்டிய நேரத்தில், கரெக்டா நடக்கும் என்று ‘சூப்பர் ஸ்டார்’ ஸ்டைலில் பதில் கூறினார்.
தீபிகாவும், சித்தார்த் மல்லையாவும் காதலிப்பது உலகறிந்த செய்தி. இதை அவர்கள் என்னதான் மறைத்து வைக்க முயன்றாலும் முடியவில்லை, பொங்கி வெளியே வந்து விடுகிறது. தீபிகா எங்கு சென்றாலும் சித்தார்த் இல்லாமல் போவதில்லை. அப்படி போனாலும், பின்னாடியே சித்தார்த்தும் வந்து விடுகிறாராம். நட்சத்திர ஹோட்டல்களில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். இதை விட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, தீபிகா ஒல்லியாக இருப்பதால் அவருக்கு சரியான ஜோடியாக இருப்பதற்காக சித்தார்த் பல கிலோ குறைத்துள்ளார் என்பதே போதுமானது.
ஸ்டைலா பதில் சொல்றதெல்லாம் இருக்கட்டும், கடைசியில் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் எனறு சொல்லாம இருந்தால் சரிதான்.
விஜய்யின் பகலவன்-உறுதி செய்த சீமான்!
தேர்தல், பிரச்சாரம், போராட்டம் இவற்றுக்கு நடுவில் அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனது அடுத்தப் படம் “பகலவன்” என்பதையும், விஜய்தான் தன்னுடைய படத்தின் ஹீரோ என்பதையும் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தானு “பகலவன்” படத்தை தயாரிக்கிறார்.
சரக்கடிக்க சிறந்த பார்-தில்லாக லிஸ்ட்போடும் ஸ்ரேயா!
முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ்.
சினிமா ஹீரோ ஆகிறார் 2ஜீ ராஜா..
வெறும் வாயையே மெல்லுவது போல நடித்துக் காட்டும் சினிமாக்காரர்களுக்கு, பல்லுக்குப் பதமாக அவலே கிடைத்தால்… சும்மா இருப்பார்களா?
இதோ… அரசியல் பெண் தரகர் நீரா ராடியா பற்றி படமெடுக்கக் கிளம்பிவிட்டார்கள்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரத்தன் டாடா, ஆ ராசாவுக்கு நிகராக பிரபலம் ஆகியிருப்பவர், அரசியல் பெண் தரகரான நீரா ராடியா. அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இவர் டெலிபோனில் பேசிய விவகாரமான பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமனம், இலாகா ஒதுக்கீடு, விவிஐபிக்களின் தனிப்பட்ட சமாச்சாரங்கள் என அவர் ‘டிஸ்கஸ்’ பண்ணாத, முடிவு செய்யாத விஷயங்களே இல்லை எனும் அளவுக்கு வாஜ்பாய் காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
இந்த பவர் புரோக்கர் நீரா ராடியா பற்றி ’2ஜி ராடியா-ஷன்’ என்ற தலைப்பில் புதிய படம் எடுக்கத் துவங்கிவிட்டனர், பாலிவுட்டில்.
இங்கிலாந்தைச்சேர்ந்த ‘ஹிடன் குரூப்’ இப்படத்தை தயாரிக்கிறது. ‘மிஸ்டர் யா மிஸ்’ படத்தை இயக்கிய டைரக்டர் சட்சித் புரானிக் இயக்குகிறார். ஆலிவுட் கேமராமேன் மாத்யூ புளுட் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில், நீரா ராடியா கதாபாத்திரத்தில், மாடல் அழகியும், நடிகையுமான பூனம் ஜாவர் நடிக்கிறார். இவர், டாப்லெஸ் போஸ்கள் கொடுத்து பிரபலமான மாடல்.
இந்த வாய்ப்பு குறித்து பூனம் ஜாவர் கூறுகையில், “இது ஒரு வித்தியாசமான முயற்சி. நீண்ட ஆலோசனைக்குப்பிறகுதான், நீரா ராடியா பற்றி படம் எடுக்க திட்டமிட்டார்கள். ஏனென்றால், அதில், சதி, அதிகாரம், சுரண்டல் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பதால், படம் திரில்லாக இருக்கும் என்று கருதினார்.
நான் நீரா ராடியா போலவே இருப்பதால், என்னை அந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். இதில் நான் கமிட்டான பிறகு, நீரா ராடியா கதாபாத்திரம் குறித்து நான் ஆய்வு செய்து வருகிறேன். அவரை நேரில் சந்திப்பது சாத்தியம் இல்லை என்பதால், அவரைப்பற்றிய கட்டுரைகளை படித்தேன். அவரது பழைய புகைப்படங்களையும் பார்த்தேன். அதன் அடிப்படையில், எனது பாணியில் நடிப்பேன்.
நீரா ராடியா, கிட்டத்தட்ட என்னைப்போல, சர்ச்சைகளை கண்டு பயப்படாத துணிச்சல்காரர். இவ்வளவு நடந்த பிறகும், அவர் பதற்றமின்றி இருப்பதே அதற்கு சான்று… அதுதான் அவரிடம் எனக்குப் பிடித்தமான விஷயம்” என்றார்.
நிராடியா படம்னா ராஜாதானே ஹீரோ.. அதான் டைட்டில்..
ரஜினி முன்னிலையில் ஐகான்வீரர்களாக விஜய், சூர்யா!
அப்போது அவர் கூறியது :
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு “சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக விஜய், சூர்யா இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது.
தெலுங்கு டீமில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் கிரிக்கெட் விதிகளின்படி ஆட்டம் நடைபெறும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டி நடக்கும். சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.
விஜய்-சூர்யாவா…சூர்யா-விஜய்யா? -கோடம்பாக்க அரசியல்!
ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது ‘ஆர்டரில்’ முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு.
முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா… அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர்.
நிதி திரட்ட விதவித போஸ்களில் த்ரிஷா காலண்டர்!
அதில் கிடைக்கும் பணத்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் த்ரிஷா.
விஜய்யை பின்னாடி தள்ளிய நடிகர் சங்கம்
இரண்டு படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் கோடம்பாக்கத்தில். அத்தனை அரசியல். இதற்கு விஜய் மட்டும் பலியாகாமல் இருப்பாரா!
நேற்று இரவு சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் அணி அறிவிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இந்த அணியின் ‘செலிப்ரிட்டி பிளேயர்கள்’ சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது ‘ஆர்டரில்’ முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு.
விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது.
முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா… அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர்
இப்போதைக்கு இல்லை – ராணி முகர்ஜீ
இப்போது திருமணம் இல்லை என்றார் இந்தி நடிகை ராணி முகர்ஜி. ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி ராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஏற்கனவே எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாகக் கூட செய்தி பரப்புகிறார்கள். நான் யாரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்யவும் இல்லை. அப்படியொரு நல்ல விஷயம் நடந்தால் அதை எல்லோருக்கும் தெரியபடுத்திவிட்டே செய்வேன். இந்த விஷயத்தை மறைக்க என்ன இருக்கிறது? தேவையில்லாமல் சிலர் திட்டமிட்டே இந்த செய்தியை பொய்யாக பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் நடித்துள்ள ‘நோ ஒன் கில்ட் ஜெசிகா’ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் சிறப்பாக நடித்துள்ளேன்.
காவலனை எதிர்க்க கூட்டு சேரும் குடும்பம்
எங்களை திட்டமிட்டு ஒழிக்க நடக்கிற சதி’ என்று விரல் நீட்டுகிறார் விஜய். அவர் நீட்டுகிற திசையில் இருக்கிறவர்கள் எல்லாருமே முதல்வர் வீட்டு வாரிசுகள். காவலன் வரும்போது ஆடுகளமும் வரும் என்று கூறிவந்த சினிமா புள்ளிகள், அதற்காகவே படத்தை இன்னும் இன்னும் என்று இழைத்துக் கொண்டிருப்பதாகவும் கொளுத்திப் போட்டார்கள். ஆனால் இப்போது திடீர் பிரேக் போடப்பட்டிருக்கிறதாம் ஆடுகளத்திற்கு.
வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரப்போகிறது காவலன். பா.விஜய் நடிக்கிற இளைஞனும் வரப்போகிறது இளைஞனை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. ஆனால் இந்த நேரத்தில்தான் ஆடுகளத்தையும் கொண்டுவரப்போவதாக சன் டீவியின் திட்டம். ஆனால் கலைஞரின் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஆடுகளத்தை களமிறக்க யோசிக்கிறது சன்டீவி.
எனவே அப்படத்தை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் செய்ய பணித்திருக்கிறார்களாம். அதனால் ஆடுகளத்தை தள்ளி வைத்து காவலனுக்கு எதிராக இளைஞனை மொத்த குடும்பமும் இணைந்து களத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஸோ ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார்கள் கலைஞரின் 75 வது படம் வெற்றி பெற வேண்டும். அதெ நேரத்தில் காவலனைத் தோற்கடிக்க வேண்டும்.
எனவே இப்போதைக்கு ‘ஆடுகளம்’ தள்ளிப்போகலாம். அல்லது ஆடுகளமும், இளைஞனும் சேர்ந்தே காவலனை எதிர்க்கலாம்.
விஜய்யை சீண்டிய உதயநிதி-பரபர பின்னணி!
விஜய்யின் பரபரப்பு அரசியல் பிரவேச பேச்சுகளும், காவலன் ரிலீஸ் செய்திகளும் வெளிவரும் வேலையில் அதன் பின்புலனில் நடந்த விசயங்கள் வெளிவரத்துவங்கியுள்ளது. சமீபத்திய தோல்விகளால் துவண்டிருக்கும் விஜய் தன் வெற்றிப்படிக்கட்டை ஆரம்பிக்க பெரிதும் நம்பி இருக்கும் படம் காவலன். ஏற்கனவே சன்பிச்சர்ஸ் வெளியிட்ட வேட்டைகாரன், சுறா இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததாலும், சன் பிச்சர்ஸுடன் இணக்கமான நிலை இல்லை என்பதாலும் விஜய் காவலனை சன் பிச்சர்ஸ்க்கு கொடுக்க கூடாது என்ற முடிவில்தான் படத்தையே ஆரம்பித்தார்கள்.
படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அனைத்தும் சென்ற கட்டுரையில் சொன்னது போல் பெரியவர்களின் கையில் மாட்டிக்கொண்டதால் தியேட்டர் இல்லாமல் தவித்தது காவலன். இதற்கு உதவி கேட்க உதயநிதியை நாடி இருக்கிறார் விஜய். காவலன் ரிலீஸ் தேதியை ஒட்டியே உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு ரிலீஸும் முடிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. உதயநிதியிடம் காவலனுக்கு தியேட்டர் கேட்க… அவரோ 9 ஆம் தேதி காவலனை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு 17 தேதி மன்மதன் அம்பு ரிலீஸ் ஆவதற்கு தியேட்டரை கொடுத்து விடுங்கள் என்று உதயநிதி கேட்டிருக்கிறார்.
அதனால் வேறு வழியில்லாமல் போயஸ்கார்டனுக்கு போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். விஜய் இதுவரை எப்போதுமே திமுக அனுதாபியாகவே முன்னிருத்தப்பட்டிக்கிறார். அஜித்தும் அதுபோல் அதிமுக அனுதாபிகவே பார்க்கப்பட்டார். விஜய் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரின் தந்தை சந்திரசேகருக்கும் அதிமுகவுக்கு எப்போதும் சிக்கல் இல்லாத நட்பு இருந்து வருகிறது. அதனால் காவலனுக்கு ஆதரவு கேட்டு முதலில் சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து பிரச்சனையை எடுத்து சொல்லியதாக தெரிகிறது.
No comments:
Post a Comment